தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், கேரளாவைச் சேர்ந்த சுனிதா என்ற 37 வயது பெண், தன்னை முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பல முக்கியமான மற்றும் விரிவான தகவல்களை சுனிதா குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும், தன் கூற்றுக்கு ஆதாரமாக டிஎன்ஏ பரிசோதனைக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த போது, சுனிதா கூறியதாவது :
“சூழ்நிலைகளால் நான் ரகசியமாகவே வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனது அடையாளம் பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை போயஸ் கார்டன் இல்லத்தில் பலமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். சமீபத்தில் மேற்கொண்ட டிஎன்ஏ சோதனை மூலம், நான் ஜெயலலிதாவின் மகள் என்பது உறுதியாகியுள்ளது.”
மேலும், ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய விசாரணை நடைபெற்று, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வகையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுனிதாவின் மனு மீது சுப்ரீம் கோர்ட் எந்தத் தீர்மானத்தை எடுக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பாகியுள்ளது.