தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் நடிகை பிரியங்கா மோகன். அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர், பிரதர் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
இந்நிலையில், தற்போது நடிகர் கவினுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ள நிலையில், புதிய படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் கமிட்டாகியுள்ளார். திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக கவின் நடிக்கிறார்.

‘கனா காணும் காலங்கள்’, ‘கட்சி சேர பாடல்’ ஆகியவைகளை இயக்கிய இயக்குநர் கென் ராய்சன் இந்த புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. பூஜை நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன