நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகே முட்டாஞ்செட்டியில் பிரசித்திபெற்ற மாசி கருப்பர், பெரிய கருப்பர், சின்ன கருப்பர் என கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் முப்பூசை விழாவையொட்டி கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இவ்விழாவில் கோவில் தலைமை பூசாரி இளையராஜா என்ற கருப்பசாமி அருள் வந்து ஆடி மிகப்பெரிய அருவாள் மீது ஏறி நின்று நாள் முழுவதும் பக்தர்களுக்கு திருமணத்தடை, குழந்தைப்பாக்கியம், கடன் பிரச்சினை, கணவன் மனைவி பிரச்சினை ஆகிய அனைத்துப் பிரச்சினைகளுக்கான அருள்வாக்கு கூறினார்.
முன்னதாக முப்பூஜையை முன்னிட்டு கருப்பசாமிக்கு ஆடு, கோழி, மீன், நண்டு, முட்டை ஆகியவை படைக்கப்பட்டிருந்தன. இந்த விழாவையொட்டி பக்தர்களுக்கு நாள் முழுவதும் கறி விருந்து அன்னதானம் வழங்கப்பட்டன.