‘காந்தாரா’ படத்துக்கு மீண்டும் புதிய சிக்கல்..

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா : சாப்டர் 1 படத்திற்கு புதிய சர்ச்சை எழுந்துள்ளது. படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில், வசூல் 400 கோடியை கடந்துள்ளது. எதிர்பார்ப்புகளின் படி, இது 800 கோடியைத் தாண்டும் என கூறப்படுகிறது.

அதே சமயத்தில், படத்தில் காணப்படும் காந்தாரா கதாபாத்திரம் சிலர் பொது இடங்களில் அவமதிப்பதாகவும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, காந்தாரா உருவில் மாறுவேடமிட்டு கடவுளின் ஆன்மீக காட்சிகளை காமெடியாய் மாற்றி வீடியோ பதிவேற்றுவது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இதையடுத்து, படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி சமீபத்தில், “காந்தாரா கதாபாத்திரம் துளு சமுதாயத்தின் பெருமை; கடவுளின் புனித தன்மை எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும். இது வெறும் பொழுதுபோக்கிற்கான படம் அல்ல. அவமதிப்பது சமுதாய உணர்வுகளை பாதிக்கும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், தெய்வராதகாஸ் எனப்படும் சில தெய்வ வழிபாட்டாளர்கள், காந்தாரா படம் தங்கள் வழிபாட்டை அவமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என மங்களூருவில் புகார் அளித்துள்ளனர். இது படத்தின் நல்ல பெயருக்கு எதிராக இருக்கலாம் என சிலர் கவலை தெரிவித்து வருகின்றனர்.

சினிமா ரசிகர்கள் இதன் சர்ச்சைகளை கடந்தால், காந்தாரா வருங்கால வரலாற்றில் முக்கிய சாதனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version