காமிக ஏகாதசி, தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் ஏகாதசியாகும். இது பெருமாளின் அருளை பெறுவதற்கான மிக முக்கியமான ஏகாதசிகளில் ஒன்றாகும். இந்த நாளில் நாம் செய்யும் எளிய பரிகாரங்கள் கூட நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் பலவற்றை முற்றிலுமாக நீக்கி விடும். எப்படிப்பட்ட துன்பங்களை நீக்கும் இந்த பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷம் மற்றும் கிருஷ்ண பக்ஷத்தின் 11வது நாளில் ஏகாதசி வருகிறது. ஆடி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசியை காமிக ஏகாதசி என்று அழைக்கிறார்கள். இது சாவான் மாதத்தில் வருகிறது. இந்த நாளில் விஷ்ணுவை வழிபட்டால் நல்லது நடக்கும். ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும். விருப்பங்கள் நிறைவேறும். ஆன்மிக வளர்ச்சி உண்டாகும். கிருஷ்ணர் யுதிஷ்டிரருக்கும், வசிஷ்டர் திலீப் மன்னருக்கும் இந்த ஏகாதசியின் சிறப்பை சொன்னதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு ஜூலை 21ஆம் தேதி காமிக ஏகாதசி வருகிறது. அன்றைய தினம் சில பரிகாரங்களைச் செய்தால் கஷ்டங்கள் நீங்கும்.
ஜூலை 20ம் தேதி காலை 11.20 மணிக்கு துவங்கி, ஜூலை 21ம் தேதி காலை 08.56 வரை மணி வரை ஏகாதசி திதி உள்ளது. ஆனால் ஏகாதசி விரதம் இருப்பவர் ஜூலை 20ம் தேதி காலையிலேயே துவங்கி, ஜூலை 21ம் தேதி பகல் பொழுதிற்கு பிறகு விரதத்தை நிறைவு செய்யலாம்.
காமிக ஏகாதசி அன்று செய்ய வேண்டிய 6 பரிகாரங்கள்:
- தீபம் ஏற்றுதல்:
காமிக ஏகாதசி அன்று விஷ்ணுவுக்கு நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்ற வேண்டும். பத்ம புராணத்தின்படி, இப்படி செய்தால் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்கள் சந்தோஷப்படுவார்கள். அவர்களின் ஆசி கிடைக்கும். வீட்டில் அமைதி நிலவும்.
- துளசி பூஜை:
ஏகாதசி அன்று துளசி செடியின் அடிப்பகுதியில் கொஞ்சம் மண் போடவும். பிறகு விளக்கு ஏற்றி துளசி தாயை வணங்கவும். இப்படி செய்தால் பாவங்கள் நீங்கும். சந்தோஷம், செல்வம், ஆசிர்வாதம் கிடைக்கும். வீட்டில் ஒற்றுமை ஏற்படும்.
- துளசி மஞ்சரி வழிபாடு:
பத்ம புராணத்தின்படி, காமிக ஏகாதசி அன்று துளசி மொட்டுக்களை (மஞ்சரி) வைத்து விஷ்ணுவை வழிபட்டால் முந்தைய ஜென்ம பாவங்கள் நீங்கும். ஆன்மீக ஞானம் மற்றும் மோட்சத்திற்கான பாதையை உறுதிப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வீட்டில் அமைதி நிலவும்.
- புனித நூல்களைப் படித்தல்:
காமிக ஏகாதசி அன்று கிருஷ்ணரின் லீலைகளைப் படிக்க வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் விஷ்ணு சாலீசா சொல்ல வேண்டும். இப்படி செய்தால் மோட்சம் கிடைக்கும். பிறப்பு, இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடலாம். முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும்.
- சிவனுக்கு அபிஷேகம்:
காமிக ஏகாதசி சாதுர் மாதத்தின் முதல் ஏகாதசி. இது சாவான் மாதத்தில் வருகிறது. எனவே இந்த நாளில் விஷ்ணுவை வழிபடுவதும், சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதும் நல்லது. இப்படி செய்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். செல்வம் பெருகும். விஷ்ணு மற்றும் சிவன் இருவரின் ஆசீர்வாதமும் கிடைக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். தடைகள் நீங்கும்.
- லட்சுமி தேவியை மகிழ்விக்க:
காமிக ஏகாதசி அன்று மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து, ஸ்வஸ்திக் சின்னம் வரையவும். இப்படி செய்தால் லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும். செல்வம் பெருகும். பண பிரச்சனைகள் தீரும். புதிய வாய்ப்புகள் வரும். பாவங்கள் நீங்கும். கெட்ட சக்திகள் விலகும். வாழ்க்கை சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
சுருக்கமாகச் சொல்வதானால், காமிக ஏகாதசி அன்று பக்தியுடன் மேற்கொள்ளும் இந்த 6 பரிகாரங்கள், வாழ்க்கையில் அமைதி, செல்வம், ஆரோக்கியம், ஆன்மீக வளர்ச்சி ஆகியவற்றை வழங்கும் என்பதை புராணங்கள் வலியுறுத்துகின்றன.