மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக ஜாய் கிரிசில்டா அதிர்ச்சி குற்றச்சாட்டு !

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீதான ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவின் குற்றச்சாட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘மெஹந்தி சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ரங்கராஜ், சமையல் துறையில் குறிப்பிடத்தக்க பெயராகவும், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவராகவும் அறியப்படுகிறார். இவர் ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அவரை எதிர்த்து கடந்த ஆண்டு ஜாய் கிரிசில்டா, “2023ல் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். அதற்கான ஆதாரங்களும் உள்ளன. கருவுற்ற பிறகு ரங்கராஜ் என்னை விட்டு விலகிவிட்டார்” என குற்றம் சாட்டியிருந்தார். மேலும், “அவரின் வற்புறுத்தலால் பல முறை கருக்கலைப்பு செய்துள்ளேன்” எனவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து அவர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இரண்டு முறை விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு மாதம்பட்டி ரங்கராஜ், தனது மனைவி ஸ்ருதியுடன் ஆஜராகியிருந்தார்.

சமீபத்தில், விசாரணை முடிவடைந்த நிலையில், ரங்கராஜ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கும் மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மாதம்பட்டி ரங்கராஜ் மகளிர் ஆணைய விசாரணையில், என்னுடன் காதலில் இருந்ததும், திருமணம் செய்ததும், குழந்தை தன்னுடையதென்றும் ஒப்புக்கொண்டார்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்ததாகவும், தனது எக்ஸ் பக்கத்தில் “ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ்… அப்பாவின் முகம் அதே மாதிரி!” எனக் கூறி குழந்தையின் கைபடத்தையும் பகிர்ந்துள்ளார்.

Exit mobile version