அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் – பிரதான பூஜையுடன் தொடக்கம்!

ஜம்மு காஷ்மீர்: புனிதமான அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் அமர்நாத் யாத்திரை, இந்த ஆண்டுக்கான நடைப்பாதையை நோக்கி பயணத்தைத் தொடங்கவுள்ளது.

இவ்வாண்டு யாத்திரை ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 9 வரை 38 நாட்கள் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாத்திரையின் ஆரம்பத்தை குறிக்கும் முக்கிய நிகழ்வாக அமர்நாத் குகையில் இன்று பிரதான பூஜை நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா கலந்து கொண்டு பனி லிங்கத்தை வழிபட்டார்.

பூஜைக்கு முந்தைய நாள்களில், யாத்திரைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நேரில் ஆய்வு செய்த துணைநிலை கவர்னர், பால்டல் பகுதியில் உள்ள யாத்ரி நிவாஸ் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும், யாத்திரை பாதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எல்லை சாலை அமைப்புத் தொழிலாளர்களுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்வுகளுக்கான தகவல்களை அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,

பாபா அமர்நாத் நமக்கெல்லாம் அருள் பொழிவாராக!” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், யாத்திரை காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு புனித குகை கோவிலில் இறைவனை வழிபட வேண்டும் எனவும், பக்தர்களை அழைத்துள்ளார்.

இதற்கு முந்தையதாக, விஸ்வ இந்து பரிஷத் சார்பில் யாத்திரையின் முதல் பூஜை தாவி ஆற்றங்கரையில் நடைபெற்றது.

Exit mobile version