ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் அபாரம் ; வலுவான நிலையில் இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தன்னம்பிக்கையுடன் ஆட்டத்தை முன்னெடுத்து வருகிறது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி சதம் பதிவு செய்தார்.

அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் கேஎல் ராகுல் 38 ரன்னில் அவுட்டானார். அதன் பின்னர், ஜெய்ஸ்வாலுடன் தமிழக வீரர் சாய் சுதர்சன் இணைந்து விக்கெட் சாய்க்காமல் நிலைத்து நின்றனர்.

இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஜெய்ஸ்வால் தனது டெஸ்ட் வாழ்க்கையின் 7வது சதத்தை பதித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மறுபுறம், சாய் சுதர்சனும் அழகான அரைசதம் விளாசினார். சதத்தை நெருங்கிய நிலையில் அவர் 87 ரன்னில் அவுட்டானார்.

ஜெய்ஸ்வால் – சாய் சுதர்சன் கூட்டணி 2வது விக்கெட்டுக்கு 193 ரன்களை குவித்து இந்திய அணியை வலுவான நிலையில் நிறுத்தியது. தற்போதைய நிலையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்துக் கொண்டு விளையாடி வருகிறது.

Exit mobile version