பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை

புதுடில்லி : பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். “பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்தால், அதன் கடும் விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க வேண்டியதாக இருக்கும்,” என அவர் கூறினார்.

இந்தியா-நெதர்லாந்து உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நெதர்லாந்து பயணத்தில் இருக்கும் ஜெய்சங்கர், அந்நாட்டு முன்னணி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “பாகிஸ்தான் அரசு மற்றும் அதன் ராணுவம் நேரடியாக பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன. பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றன. இது தாங்க முடியாத சூழலை உருவாக்குகிறது” எனத் தெரிவித்தார்.

“பாசாங்கு வேண்டாம்” – ஜெய்சங்கர் கடும் விமர்சனம்

பாகிஸ்தான், பயங்கரவாத தாக்குதலில் தங்களுக்குப் பங்கு இல்லை என்று பாசாங்கு செய்வதை நிறுத்த வேண்டும் எனவும், உண்மையை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். பயங்கரவாதம் என்பது சர்வதேச குற்றமாகும். அதை ஏற்க முடியாது; மன்னிக்க முடியாது; மேலும், எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா – நெதர்லாந்து உறவுகள்

இந்தியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக நெதர்லாந்து உள்ளது. இருநாடுகளுக்கும் இடையே பல்துறைகளில் வலுவான கூட்டாண்மை உள்ளது. அந்தச் சமயத்தில் இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை நெதர்லாந்து பாராட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version