“எதுவுமே செய்யலேன்னா கூட நோபல் கிடைக்கும் போல !” – கிண்டலாக பேசிய டிரம்ப் !

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை நோக்கி, “எதுவுமே செய்யாதவருக்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்” என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது. மொத்தம் 338 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், நார்வே பார்லியால் நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு பரிசீலனை செய்து வெற்றியாளரை தேர்வு செய்ய இருக்கிறது. நோபல் விருதுடன் பதக்கம் மற்றும் ரூ.10 கோடி மதிப்பிலான பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

இதையொட்டி நிருபர்களிடம் பேசிய டிரம்ப், “எப்படியும் எனக்குத்தான் நோபல் பரிசு கிடைக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் எதுவுமே செய்யாத ஒபாமாவுக்கு தான் முன்பு பரிசு கொடுத்தார்கள். அந்த பரிசு என்னவென்று கூட அவருக்குத் தெரியாது! நம் நாட்டை அழித்த ஒருவருக்கு தான் அந்த விருது கிடைத்தது. அவர் ஒரு சிறந்த அதிபர் அல்ல,” என்று கடுமையாக தாக்கி பேசினார்.

மேலும், “நான் எட்டு போர்களை நிறுத்தியிருக்கிறேன். இதுவரை அமெரிக்க வரலாற்றில் இதுபோல் நடந்ததே இல்லை,” எனவும் டிரம்ப் கூறினார்.

அவரின் இந்தக் கூற்றை பல நாடுகள் மறுத்துள்ளன. இருப்பினும், ஒபாமாவை நோக்கிய டிரம்பின் இந்த கிண்டல் பேச்சு தற்போது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version