“முதல்வரை ஏன் சந்தித்தார் ஓ.பி.எஸ்.? – திருமா சந்தேகம்”

சென்னை :
“முதல்வர் ஸ்டாலினை ஓ.பி.எஸ். எந்த நோக்கத்தில் சந்தித்தார் என எனக்கு தெரியவில்லை. ஆனால் அவருக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது என்று நம்புகிறேன்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் ஓ.பி.எஸ். மற்றும் பிரேமலதா சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “இது மகிழ்ச்சியாகும் ஒரு விஷயம். ஓ.பி.எஸ். தேஜ கூட்டணியிலிருந்து விலகியிருப்பது அவருக்கு நல்ல மாற்றத்தைத் தரும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

மேலும், “மற்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதா?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, “அதை கூட்டணியின் தலைவரே முடிவு செய்வார். கூட்டணி வலுப்பெறும் நிகழ்வுகள் எங்களுக்கு சந்தோஷம்தான்” என்றும் தெரிவித்தார்.

Exit mobile version