ஐபிஎல் 2025 | பிளேஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடக்கம் !

2025 ஆம் ஆண்டுக்கான 18வது ஐபிஎல் சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கிய , 10 அணிகள் கோப்பைக்காக கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. தற்போது, புள்ளிப்பட்டியலில் முன்னணியில் இருப்பதன் மூலம், பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள அணிகள் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகியவையாகும்.

இந்நிலையில், பிளேஆஃப் கட்டத்துக்கான கால அட்டவணையும், டிக்கெட் விற்பனையையும் ஐபிஎல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிளேஆஃப் போட்டிகள் விபரம்:

மே 29 – குவாலிஃபையர் 1

மே 30 – எலிமினேட்டர்

ஜூன் 1 – குவாலிஃபையர் 2

ஜூன் 3 – இறுதிப்போட்டி

இந்த முக்கியமான போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை (மே 24) முதல் தொடங்கி, மே 27 வரை நடைபெறும்.

டிக்கெட் வாங்கும் இணையதளங்கள்:

www.iplt20.com

www.district.in

ஐபிஎல் ரசிகர்கள் தங்களுக்கான சீட்டுகளை முன்பதிவு செய்து, நேரில் சென்று சூடான போட்டிகளை அனுபவிக்க தயாராக இருக்கலாம்!

Exit mobile version