பஞ்சாப் – பெங்களூரு இடையே இன்று ஐபிஎல் இறுதி ஆட்டம்..!

ஐபிஎல் 2025ஆம் ஆண்டிற்கான தொடர் 73 போட்டிகளை கடந்து இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதாலும் கோப்பையை வெல்ல இரு அணிகள் வெறிகொண்டு மோதும் என்பதாலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.

ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளுக்கு கோப்பையை வென்று கொடுத்த முதல் கேப்டன் என்ற மகத்தான பெருமையை பெறுவார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன. முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், அடுத்த 2 ஆட்டங்களில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஏறக்குறைய சரிசம பலத்துடன் முதல்முறையாக கோப்பையை முத்தமிட இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Exit mobile version