டோக்கியோ : ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா–ஜப்பான் பொருளாதார மன்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
“இந்தியாவில் பொருளாதாரத்திலும் அரசியலிலும் நிலைத்தன்மை நிலவுகிறது. ராணுவம், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியா மிக விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும்” என வலியுறுத்தினார்.
மேலும் அவர் தொடர்ந்துரைத்ததாவது :
இந்தியா தற்போது மிகவும் நம்பிக்கைக்குரிய நாடாக திகழ்கிறது. ஜப்பான் வணிகத்திற்கும் முதலீட்டுக்கும் இந்தியா பெரிய வாய்ப்புகளை அளித்து வருகிறது.
செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர், குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக், விண்வெளி துறைகளில் துணிச்சலான பல முன்னேற்றங்களை இந்தியா எடுத்து வருகிறது.
ஜப்பானின் தொழில்நுட்ப வல்லுநர்களும், இந்தியாவின் திறமையும் இணைந்தால் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்த முடியும். என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.