இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடந்து வரும் ஐந்துபோட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது ஆட்டம் இன்று (ஜூலை 23) மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்பேரில், இந்திய அணி பேட்டிங் செய்கிறது.
தொடரில் இங்கிலாந்து தற்போது 2-1 என்ற முன்னிலையில் இருக்க, இந்த போட்டியில் இந்தியா கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் போட்டிக்காக இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டியின் இடத்தில் அன்சுல் கம்போஜ் மற்றும் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாற்றங்கள் இங்கிலாந்து அணியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயம் காரணமாக விலகிய பஸ் ராக்ப் பதிலாக, 8 ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்ட டவ்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
மான்செஸ்டர் மைதானத்தில் இந்தியா இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், ஒரு போட்டியிலும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, இங்கிலாந்து அணி இதே மைதானத்தில் 20 போட்டிகளில் 14 வெற்றி, 4 டிரா மற்றும் வெறும் 2 தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது.