வாஷிங்டன் : இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றின் மேற்கொள்ளும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த ஒப்பந்தம் வரும் ஜூலை 8ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பலமுறை குறிப்பிடுவதும், சமீபத்தில்,
இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தை செய்ய உள்ளோம். தற்போது சீனாவுடன் ஒப்பந்தத்தை தொடங்கியுள்ளோம்.
நாங்கள் எல்லா நாடுகளுடனும் ஒப்பந்தம் செய்ய மாட்டோம். சிலருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்புவோம்,”
என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, இந்திய வர்த்தகத் துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவினர் தற்போது வாஷிங்டனில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி,
உலக நாடுகளுக்கு மீது பரஸ்பர வரிகளை விதிப்பதற்கான டிரம்பின் காலக்கெடு ஜூலை 9-இல் முடிவடைகின்றது. இதனை முன்னிட்டு, இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் சரியான நேரத்தில் கையெழுத்தாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது”
எனத் தெரிவித்துள்ளனர்.