Ind vs SA | 2 ஆவது ஒரு நாள் போட்டியில் முக்கிய மாற்றம்?

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றும் நோக்கில் இரு அணிகளும் தீவிர தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா, முதல் ஒருநாளில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. அந்த வெற்றியால் உற்சாகம் பெற்ற இந்திய அணி, இன்று நடைபெறும் ஆட்டத்தையும் வென்று தொடரை உறுதி செய்யத் தீவிரமாக முயற்சி செய்கிறது.

ஆனால், முதல் போட்டியின் செயல்திறனை மதிப்பீடு செய்யும் நிலையில், இந்திய அணியின் ஆடும் 11-ல் சில மாற்றங்கள் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இளம் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் இடம் குறித்து விவாதம் எழுந்துள்ளது.

முதல் ஒருநாளில் 14 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரைவாக ஆட்டமிழந்த ருதுராஜ், இன்று நடைபெறும் போட்டியில் ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக அணிக்குள் தகவல்கள் கூறுகின்றன. அவரது இடத்திற்கு திலக் வர்மா அல்லது ரிஷப் பந்த் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்றைய ஆட்டம், தொடரின் திசையை தீர்மானிக்கும் முக்கிய போட்டி என்பதால், இந்திய அணி ஆடும் 11-ல் எத்தகைய மாற்றம் வருகிறது என்பதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.

Exit mobile version