நடிகர் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம்.. ?

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்பாக ஆஜராகினர். கடந்த 2009ம் ஆண்டு நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தான் நடிகர் ஜெயம் ரவி திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நடிகர் ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் எனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி கோரியிருந்தார். இந்த மனுவுக்கு ரவி மோகன் ஜூன் 12ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version