“ராமதாஸுக்கு ஏதாவது நடந்தால் சகிக்கமாட்டேன்” – அன்புமணி கடும் எச்சரிக்கை

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை மையமாக வைத்து சிலர் அரசியல் நாடகம் நடத்தி வருவதாகவும், அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அது சகிக்க முடியாது என கடுமையாக எச்சரித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

பாமக தந்தை–மகன் கருத்து முரண்பாடு நிலவுகின்ற நிலையில், சென்னை பனையூரில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அன்புமணி தலைமையில் நடைபெற்றது.

அதில் பேசிய அன்புமணி, “ராமதாஸை வைத்து சிலர் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரை ஓய்வெடுக்க விடாமல் அடிக்கடி தொந்தரவு செய்கின்றனர். மருத்துவர் ராமதாஸ் நலமாகவே உள்ளார். ஆனால் யாரோ வந்து ‘அவருக்கு உடல்நிலை சரியில்லை, சென்று பாருங்கள்’ என்று தவறான தகவல்களை பரப்புகின்றனர். இது வெட்கக்கேடான செயல். ராமதாஸ் எந்தக் கண்காட்சி பொருளும் அல்ல. அவர் உயிருடன் இருக்கிறார்; அவரை அமைதியாக விடுங்கள். அவருக்கு ஏதாவது நடந்தால் நான் பொறுக்கமாட்டேன்,” என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, தனது பிறந்த நாளையொட்டி தாயார் சரஸ்வதியிடம் நேரில் சென்று ஆசீர்வாதம் பெற்றார் அன்புமணி. கடந்த அக்டோபர் 9ஆம் தேதி பிறந்த நாளை கொண்டாடிய அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

Exit mobile version