“இனி ஏர் இந்தியாவில் ஏற மாட்டேன் !” – விமான விபத்து தொடர்பான முன்னாள் ஊழியரின் பகிர்வை டேவிட் வார்னர் விமர்சனம் செய்தார்

274 பேர் உயிரிழந்த விமான விபத்து ; முன்னேச்சரிக்கை தெரியாமை குறித்து விமர்சனம்

குஜராத்திலிருந்து லண்டன் நோக்கி கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா AI171 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மருத்துவ பயிற்சி மாணவர் குடியிருப்பில் விமானம் மோதியதால், பயணித்த 242 பேரில் 241 பேரும் உயிரிழந்தனர். அதே நேரத்தில், மோதிய குடியிருப்பில் இருந்த 33 பேரும் உயிரிழந்தனர். இந்த பயங்கர விபத்தில் மொத்தம் 274 பேர் பலியாகினர்.

விபத்தில் இருந்து விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்ற ஒரே நபர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விமான விபத்தைத் தொடர்ந்து, ட்ரீம்லைனர் விமானத்தில் ஏற்கனவே தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததாகவும், பயணிகள் மற்றும் பணியாளர்கள் பலமுறை புகார் தெரிவித்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஏர் இந்தியாவின் முன்னாள் ஊழியர் ஒருவர், தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “இந்த விமானத்திற்குள் பல ஆண்டுகளாக தொழில்நுட்பப் பிரச்சனைகள் இருந்து வருகின்றன. அதற்குறித்த தகவல்கள் விமானப் பதிவு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நிறுவனம் எப்போதும் ஊழியர்களை இதைப்பற்றி வெளியில் பேச அனுமதிக்காது” எனக் கூறியிருந்தார்.

இந்த பதிவை ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும், “இது உண்மையாக இருந்தால் மிகவும் அதிர்ச்சி தருவதாகும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இனி நான் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய மாட்டேன்” எனத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version