விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு இல்லை. பெற்றோரின் மண விழாவிற்கு மகன் வரவில்லை என்றால் தந்தைக்கு எப்படி இருக்கும் என்பதை இது போன்ற நிகழ்வுகள் நினைவூட்டுகின்றன. தமிழக மக்களுக்கு தொண்டு செய்த தலைவர்களை எந்த அரசியல் கட்சியும் கொச்சைப்படுத்த கூடாது. இது ஒரு பிரச்னை அல்ல. இது அரசியல் கட்சிகளுக்கு விடுக்கும் ஒரு வேண்டுகோள்.
கட்சித் தலைமை தொடர்பாக அவர் கூறியது :
பா.ம.க.வில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு இருக்கும். அந்த முடிவு இன்னும் எட்டப்படவில்லை. நான் தொடங்கிய கட்சியை 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று வளர்த்தேன். மீண்டும் சொல்கிறேன். பா.ம.க.,வை வளர்த்தது நான் தான். மூச்சு இருக்கும் வரை கட்சிக்கு தலைவராக செயல்படுவேன்.
பொறுப்புகள் பற்றியும் அவர் விளக்கம் அளித்தார் :
கருணாநிதி பாணியில் நான் தலைவராக இருப்பேன். ஸ்டாலின் போன்று அன்புமணி செயல் தலைவராக இருக்க வேண்டும். இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின், அப்போது முணு முணுக்க வில்லை. கட்சியில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகளே கொடுத்து இருக்கிறேன். நான் புதிதாக அளித்த பொறுப்புகள் எல்லாம் நிரந்தரம் தான். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
இளைஞர் அணி தலைமை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க அவர் கூறியது :
ஜி.கே. மணியின் மகன் மற்றும் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக ஏற்க அன்புமணி ஏன் தயங்குகிறார் என்ற கேள்விக்கு, “யாம் அறியேன் பராபரமே…” என்ற வாசகத்தைக் கூறி ராமதாஸ் பதிலளித்தார்.