“சகோதரியாக மட்டுமே பார்த்து பழகினேன்” – திருநங்கை பாலியல் குற்றச்சாட்டுக்கு நாஞ்சில் விஜயன் விளக்கம்

சென்னை: திருநங்கை மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன், சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த திருநங்கை வைஷு, “நாஞ்சில் விஜயன் திருமணம் செய்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியுள்ளார்” என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்திருந்தார். அவர் புகாரில், “காதலித்து, திருமணம் செய்வதாகச் சொல்லி உடலுறவு வைத்துக்கொண்டு தற்போது பின்வாங்குவது ஏமாற்றம். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்” என குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நடிகர் நாஞ்சில் விஜயன், தனது சமூக வலைதளப் பதிவில்,

“வாழ்வில் நல்ல பெயர் பெறவேண்டுமே அன்றி சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை. 11 வருடங்களாக இணைந்து வாழ்ந்ததாகக் கூறப்படுவது உண்மை அல்ல. அப்படி இருந்தால் வீட்டுவசதி அளித்தவர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.

வைஷுவை நான் சகோதரியாகவே பார்த்தேன், காதல் உணர்வு எதுவும் இல்லை. அவர் தான் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். எனக்கு விருப்பமில்லையென்று தெளிவாகச் சொன்னேன்.

திருமணத்திற்கு பிறகும் அவர் இரவு நேரங்களில் தொடர்பு கொள்ள முயன்றார். அதனால் எல்லா தளங்களிலும் அவரை பிளாக் செய்தேன்.

நான் குழந்தைக்காகவே மரியாவை திருமணம் செய்துகொண்டதாக கூறியிருப்பது தவறு. 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் கூறியிருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

திருநங்கை என்பதால் அவரை ஒதுக்கவில்லை. எனக்கு நிறைய திருநங்கை நண்பர்கள் உள்ளனர். ஆனால் என்னை பாலியல் குற்றச்சாட்டில் சிக்கவைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று,” என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், “என் குடும்பத்தினருக்கு மிகுந்த அவமானம் ஏற்பட்டுள்ளது. யூடியூப் தம்ப்நெயில்கள் வழியாக பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் மிகவும் அருவருப்பாக உள்ளன. தயவுசெய்து உண்மை நிலையை புரிந்து கொண்டு பேசுங்கள்” என அவர் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version