சென்னை: இயக்குநர் சந்துருவின் புதிய படமான ‘ரிவால்வர் ரீட்டா’ நவம்பர் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் தலைசிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த டார்க் காமெடி திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், படத்திற்கான தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். “ரிவால்வர் ரீட்டா கதை சொல்லும்போதே நான் ஓயாமல் சிரித்தேன். சந்துரு சார் சொல்லும் காட்சிகள் எல்லாமே அப்படி ஒரு ரசனையா இருந்தது. என்னை ரீட்டாவாக தேர்வு செய்தது பெரிய நம்பிக்கை,” என அவர் தெரிவித்தார்.
நடிகர்–நடிகையர் அணியுடனான அனுபவம் ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தில், ராதிகா மேடமுடன் முதல் முறையாக இணைந்து நடித்த அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருந்ததாக கீர்த்தி கூறினார்.
“ராதிகா மேடம் தமிழில் என்னை அறிமுகப்படுத்தியவர். அவருடன் நடித்த காட்சிகளை ரசிகர்கள் விரும்பி ரசிப்பார்கள்,” என்றார்.
தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பாராட்டு
ஒளிப்பதிவாளர் தினேஷின் அழகான படப்பிடிப்பு, இசையமைப்பாளர் ஷானின் நன்றான இசை, கலை இயக்குநரும் எடிட்டரும் செய்த பணிகளை கீர்த்தி சிறப்பாக பாராட்டினார். மேலும், The Route நிறுவனத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சுதன் சுந்தரத்திற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
டார்க் காமெடியில் கீர்த்தி
“ரிவால்வர் ரீட்டா ஒரு முழுக்க முழுக்க டார்க் காமெடி படம். திரையரங்கில் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்,” என கீர்த்தி சுரேஷ் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளார். படம் நவம்பர் 28ல் திரையரங்குகளுக்கு வருகிறது.
















