டில்லியில் ஹூமாயூன் கல்லறை குவிமாடம் இடிந்து விழுந்தது : 10 பேர் சிக்கி மீட்பு பணி தீவிரம்

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட ஹூமாயூன் கல்லறையின் குவிமாடம் டில்லியில் இடிந்து விழுந்தது. இதில் 10 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்க தீயணைப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக டில்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சாலைகள் நீரில் மூழ்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹூமாயூன் கல்லறையின் குவிமாடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் அங்கு இருந்த 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்பு படையினர், இயந்திரங்கள் மற்றும் கையடக்க உபகரணங்கள் மூலம் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாபரின் மகனான ஹூமாயூன் 1556 ஆம் ஆண்டு காலமானார். அவரின் நினைவாக, 1558 ஆம் ஆண்டில், அவரது மனைவி பேகா பேகம் இந்த கல்லறையை கட்டினார். பாரசீகக் கட்டிடக் கலைஞர்களின் பங்களிப்பில் வடிவமைக்கப்பட்ட இந்த கல்லறை, இந்திய முசுலீம் கல்லறைக் கலைக்கான சிறந்த உதாரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Exit mobile version