மனித உரிமைகள் தினம்: திண்டுக்கல் காமலாபுரத்தில் விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம்!

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் காமலாபுரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கையெழுத்துப் பிரசாரம் ஒன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வானது, காமலாபுரத்தில் இயங்கி வரும் HELPS தொண்டு நிறுவனம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையக் குழு ஆகியவை இணைந்து நடத்தப்பட்டது. நிகழ்வுக்குக் கள ஒருங்கிணைப்பாளர் திருமதி இந்திரா அவர்கள் சிறப்பான முறையில் வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து, பட்டியல் வழக்கறிஞர்  அம்பிகா அவர்கள் மனித உரிமைகள் தினத்தின் அவசியம், மனித உரிமைகளின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விளக்கமளித்தார். பொதுமக்களுக்கான அவசர உதவி எண்களைப் பயன்படுத்தும் முறை குறித்தும் அவர் அறிவுறுத்தினார்: பெண்களுக்கான அவசர உதவி எண்கள்: 181, 1091 குழந்தைகளுக்கான உதவி எண்: 1098 அவசரப் புகார் எண்: நேரில் வர முடியாத சூழலில் உதவிகேட்டுப் புகார் அளிப்பதற்காக அடிப்படை அவசர எண் 15100-ஐப் பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார். வழக்கறிஞர் அம்பிகா கையெழுத்திட்டு, இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், அங்கன்வாடி பணியாளர் ஷோபனா, சுகாதார செவிலியர் சுகன்யா, மெட்டூர் உதவி கிளை அஞ்சல் அலுவலர் செல்வி ஜெயபாரதி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி கொடைரோடு கிளை மேலாளர் சரஸ்வதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் HELPS அமைப்பின் செயலாளர் மரிய ஜான் கிறிஸ்டோபர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும், திட்ட மேலாளர் சுமதி, கள ஒருங்கிணைப்பாளர்கள் இந்திரா, கிருத்திகா, தன்னார்வலர்கள் புஷ்பலதா, லட்சுமி ஆகியோரின் கூட்டு ஒத்துழைப்புடனும் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர். நிறைவில் கள ஒருங்கிணைப்பாளர் கிருத்திகா அவர்கள் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

Exit mobile version