பாமக-வுக்கு மாற்றாக ஜெ.குரு மகள் தொடங்கிய புதிய கட்சி

மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகள், வரும் 9-ம் தேதி, ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கவுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.குருவின் மகள் விருதாம்பிகை, சேலத்தில் புதிய கட்சி அறிமுக விழா நடைபெறும் என்றும், வடதமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார். சமூக நீதியே தங்கள் கட்சியின் கொள்கை என்று கூறிய அவர், தற்போது பா.ம.க-வில் ஒற்றுமை இல்லை என்றார்.

Exit mobile version