மயிலாடுதுறையில் சுப்பிரமணி சுவாமி திருக்கோவிலில் ராஜகோபுரத்திற்கு தீபம் ஏற்றி பாஜகவினர் கொண்டாடி வழிபாடு

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரை கிளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து மயிலாடுதுறையில் சுப்பிரமணி சுவாமி திருக்கோவிலில் ராஜகோபுரத்திற்கு தீபம் ஏற்றி பாஜகவினர் கொண்டாடி வழிபாடு.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக இன்று சென்னை மதுரை கிளை உயர்நீதிமன்றம் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என நீதிபதிகள் தீர்ப்பு வழித்ததை தொடர்ந்து தமிழகத்தில் பாஜகவினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூரைநாட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியசாமி ஆலய ராஜகோபுரத்தில் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பாஜகவினர் கொண்டாடி வெளிப்பட்டனர். பாஜக 26வது வார்டு கிளைத் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக நகரத் தலைவர் ராஜகோபால், முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் மோடி கண்ணன், நகர துணைத் தலைவர் செல்வம், பொதுச்செயலாளர் மணிமேகலை,ராம்குமார், நகரச் செயலாளர் லட்சுமி, , சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் அருள்ராஜ், கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இந்நிகழ்வில் பாஜக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version