இந்தியர்கள் 30 பேரை கைது செய்த அமெரிக்க அரசு – காரணம் என்ன?

அமெரிக்காவில் வேலை நிமித்தமாகவும், சுற்றுலாவுக்கு செல்லும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள்,தங்களுடைய விசா காலம் முடிந்த பிறகும் அங்கு சட்டவிரோதமாக தங்கிவிடுகின்றனர்.அந்த வகையில் அங்கு தங்கி லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்த இந்தியர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியாவின் எல் சென்ட்ரோ செக்டர் பகுதியில், எல்லையோர ரோந்து போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். வணிக ஓட்டுநர் உரிமங்களை மட்டுமே பெற்றிருந்த சிலர், கனரக சரக்கு லாரிகளை இயக்குவது கண்டறியப்பட்டது. இவ்வாறு முறைகேடான உரிமங்களுடன் பணிபுரிந்த ஓட்டுநர்களில் 49 பேர் சட்டவிரோத குடியுரிமையில் தங்கியிருப்பதும் கண்டறிப்பட்டது.

அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் 30 பேர் இந்தியர்கள் என்று, அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Exit mobile version