வெள்ளை மாளிகையில் உள்ள ‘அதிபர்கள் நடைபாதை’ பகுதியில், முன்னாள் அதிபர்களின் புகைப்படங்களுடன், அவர்களை பற்றிய தகவல்கள் அடங்கிய பலகை இடம்பெற்றிருந்தது. இவற்றை அகற்றிவிட்டு, அவர்களை விமர்சிக்கும் வகையிலான புதிய பலகைகளை டிரம்ப் நிர்வாகம் அமைத்துள்ளது.
அதில் ஜோ பைடனை “தூக்கக் கலக்க பைடன்” என்று குறிப்பிட்டுள்ளதோடு, அவர் அமெரிக்க வரலாற்றிலேயே “மிகவும் மோசமான அதிபர்” என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை “அமெரிக்க வரலாற்றிலேயே பிரிவினையை ஏற்படுத்திய மனிதர்” என்றும், புஷ் ஆட்சியில் பொருளாதார நெருக்கடி நிலவியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாசகங்கள் அனைத்தும் அதிபர் டிரம்பால் நேரடியாக எழுதப்பட்டவை என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் உறுதிப்படுத்தியுள்ளார். வெள்ளை மாளிகையின் பாரம்பரிய நடைமுறைகளை மீறிய டிரம்பின் இந்த செயலுக்கு, வரலாற்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

















