மீண்டும் ஏமாற்றமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் – பேச்சுவார்த்தையில் பயனில்லை

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை.

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச்செயலகம் அருகே காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, பல்வேறு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினரை அழைத்து இன்று இரண்டாவது நாளாக அமைச்சர் முத்துசாமி சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பணி நிரந்தரம் கோரிக்கையை அனைத்து சங்கத்தினரும் பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர். அனைவரது கோரிக்கையையும் கேட்டுக்கொண்ட அமைச்சர் நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறினார்.

Exit mobile version