சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, உறவுகளை இழந்தவர்கள், அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு எழுந்தது. இதனால், இந்தியா, இலங்கை உள்பட 14 நாடுகளின் கடலோர பகுதிகள், கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆழிப்பேரலை தாக்குதலில் இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில், சுமார் 3 லட்சம் பேர் மாண்டு போனார்கள். இன்று சுனாமி தாக்கியதன், 21-ஆம் ஆண்டு நினைவு தினம் என்பதால், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை, கடலோர மாவட்டங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீனவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், கடலில் பால் ஊற்றியும், பூக்கள் தூவியும் வழிபாடு நடத்தினர்.















