அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் – அரசு எச்சரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.ஆனால் இவர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை, இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இதனால் அரசு பணி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு தலைமைசெயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version