உள்ளாட்சி அமைப்புகளில் 9 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்பட இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, 400 இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மின் கலனால் இயங்கும் சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். மேலும், சிறந்த பணியாற்றியவர்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் இதுவரை 3 ஆயிரத்து 631 பேர் பயன்பெற்றிருப்பதாக குறிபிட்டார். இதன் மூலம் சிறப்பாக பணியாற்றி மற்ற மாநிலங்களும் இந்த சட்டத்தை பின்பற்றும் வகையில் மாற்றுத்திறனாளிகள் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
