நெல்லை மாவட்டத்தில் 694 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். நெல்லை மாவட்டத்தில் அரசுமுறை பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், இன்று காலை 15 புதிய அரசுப் பேருந்து சேவையை துவக்கி வைத்தார்.
அதன்பிறகு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் கலந்து கொண்டு, அங்கு கட்டப்பட்டிருக்கும் கூடுதல் கட்டிடம், பாளையங்கோட்டையில் உணவு பகுப்பாய்வு பூங்கா ஆகியவற்றை தொடங்கி வைத்தார். காயிதே மில்லத் பெயரில் 98 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள, அறிவு சார் நூலக கட்டிடம் மற்றும் 11 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இதுதவிர, 101 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பில் 45 ஆயிரத்து 116 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். முன்னதாக மகளிர்திட்டம், தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்து வைத்து முதலமைச்சர் பார்வையிட்டார்.
