அமித்ஷாவுடன் சங்கிப்படையே வந்தாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது – ஸ்டாலின் சவால்

திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி, திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வடமாவட்டங்களில் அடங்கிய 91 தொகுதிகளைச் சேர்ந்த, ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இளைஞர் அணியினர், மக்களுடன் பயணித்து, மக்களுக்கான தேவைகளை அறிந்து, அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் திமுக அரசு நிறைவேற்றியுள்ள சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். பத்தாண்டுகாலம் ஆட்சியிலிருந்த போது, மாநிலத்தை பின்னோக்கி கொண்டுசென்ற அதிமுக-வின் தோல்விகளைவும், மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துரைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

பீகாரை வென்று விட்டோம், அடுத்து தமிழ்நாடுதான் என்று சொல்லியிருக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, தாம் சொல்லிக்கொள்வதெல்லாம், அவர் மட்டுமல்ல, சங்கி படையே வந்தாலும், இங்கு வெற்றிபெறமுடியாது என்றார்.

Exit mobile version