தமிழ்நாடு காவல்துறையில் ஆயிரத்து 299 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப, இன்று எழுத்து தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு குறித்த அறிவிப்பு, கடந்த ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்கள் மட்டுமே, அடுத்தகட்டமாக உடல் உறுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்நிலையில், மாநிலம் முழுவதும் 46 மையங்களில் இன்று எழுத்து தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும் 9 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. காலை 10 முதல் முதல் 12-30 மணி வரை, முதன்மை தேர்வும், பிற்பகல் 3-30 மணி முதல் மாலை 5.10 மணிவரை தமிழ் தேர்வும் நடைபெறுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி என 2 இடங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வில் முறைகேட்டை தடுக்க, அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பிற நகரங்களிலும் தேர்வு நடைபெற்று வருகிறது.
