விரைந்து தொகுதி பங்கீடு செய்யுங்கள் – வற்புறுத்தும் செல்வப்பெருந்தகை

இரண்டு மாதங்களுக்கு முன்பே தொகுதி பங்கீட்டை முடித்தால் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வேட்பாளரை தேர்வு செய்ய எளிதாக இருக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் யசோதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு செல்வபெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிஜேபி ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது என தெரிவித்தார். பீகார் போன்ற மாநிலங்களில் கடைசி நேரத்தில் கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கியதால் பல சிக்கல்கள் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டும் என்றும் திமுகவுக்கு செல்வபெருந்தகை கோரிக்கை விடுத்தார்.

Exit mobile version