கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் காரை வழிமறித்து தரக்குறைவாக பேசிய தி.மு.க. நிர்வாகியை நாம் தமிழர் கட்சியினர் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரில் புறப்பட்டார். அப்போது திமுக நிர்வாகியான ரங்கநாதன் என்பவர் தகாத வார்த்தைகளால் சீமானை திட்டியதாக கூறப்படுகிறது. உடனே காரில் இருந்து இறங்கிய சீமான் இது குறித்து கேட்டார். ஆனால் நிலைமை தீவிரம் அடைந்ததை அடுத்து சீமானை அவரது ஆதராளர்கள் காரில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதையடுத்து தி.மு.க. திமுக பிரமுகரை சரமாரியாக தாக்கிய நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

















