திருவள்ளுர் மாவட்டம் அம்மனேரி கொண்டாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 7-ம் வகுப்பு மாணவனின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ஆர்.கே.பேட்டை அருகேயுள்ள இந்தப் பள்ளியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில், அதே பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படித்துவந்த சரத்குமார் என்பவரின் மகன் மோஹித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இந்த செய்தியைக் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்ததாகக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் மாணவனின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

















