மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராகுல்காந்தி, கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பிரதமர் மோடியின் முயற்சி என்று குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான, புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிப்பு தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், ராகுல்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் புதிய மசோதாவை கிராமம் முதல் நாடாளுமன்றம் வரை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்று குறிடப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தியின் கொள்கை மற்றும் ஏழைகளின் உரிமைகள் என்ற இரண்டு விஷயங்கள் மீது பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளதாகவும், அதன் காரணமாகவே அந்த திட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க அவர் முயற்சிப்பதாக கூறியுள்ளார்.
இந்தத் திட்டம் கோடிக்கணக்கான ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஒரு உயிர்நாடியாக உள்ளது. கொரோனா காலத்திலும் அவர்களின் பொருளாதார பாதுகாப்புக்கு அரணாக இருந்த நிலையில், இந்த திட்டத்தை பலவீனப்படுத்த 10 ஆண்டுகளாக பிரதமர் முயற்சித்து வந்ததாக ராகுல் கூறியுள்ளார். வேலைவாய்ப்பின்மை மூலம் நாட்டில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்ட பிரதமர் மோடி, இப்போது இந்த மசோதாவால் கிராமப்புற ஏழைகளின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தையும் ஒழிக்க முயற்சிப்பதாக ராகுல்காந்தி அதில் கூறியுள்ளார்.
