எஸ்.ஐ.ஆர் எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்த விவாதம் நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 1948ல் தேசத் தந்தை மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை, இன்று நமது நண்பர்கள் போற்றுவது இல்லை. ஏனென்றால், அது கசப்பான உண்மை என்பதால் எனக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் அனைத்து அமைப்புகளும் மக்களது வாக்குகள் அடிப்படையிலேயே செயல்படுவதால், அவற்றை ஒவ்வொன்றாக கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டதாகவும் ராகுல் கூறினார். முதலில் கல்வி நிலையங்களையும், இரண்டாவதாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றையும், மூன்றாவதாக நமது நாட்டின் தேர்தல் முறையை கையாளும் தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றி இருப்பதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
அதிகாரத்தில் இருப்பவர்களுடன் கைகோர்த்துள்ள தேர்தல் ஆணைய, தேர்தல் நடைமுறைகளை மாற்றி வடிவமைப்பதாக குற்றம்சாட்டிய அவர், வாக்குத் திருட்டைவிட மிகப்பெரிய தேசத் துரோகம் வேறு எதுவும் இல்லை என்றார்.
















