இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் – உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்

ரஷ்ய அதிபர் புதின் 2 நாள் அரசு முறை பயணமாக, இன்று டெல்லி வருகிறார். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இந்தியா-ரஷியா நாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது, இதில், பங்கேற்க ரஷியா அதிபர் புதின்,இன்று இந்தியா வருகிறார்.

டெல்லி வரும் அவர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரஷிய-இந்திய மாநாட்டின்போது, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வணிகம், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த முக்கிய ஆலோசனைகளும் நடைபெற உள்ளன. புதினின் வருகையையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version