இரண்டு இலக்கத்தில் வளர்ச்சியடையும் மாநிலம் தமிழ்நாடு தான் – அமைச்சர் PTR பெருமிதம்

குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கு, இந்திய அரசிடம் இருந்து கிடைக்கப்பெறும் சலுகைகள் தான் காரணம் என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு அமைப்பு சார்பில் சென்னையில் தொழில் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், குஜராத் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி கிட்டத்தட்ட சரி சமமாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவிலேயே இரண்டு இலக்க பொருளாதார வளர்ச்சி கொண்ட ஒரே மாநிலம் தமிழகம் தான் என்றும் கூறினார். குஜராத்தின் வளர்ச்சி என்பது அங்குள்ள உட்கட்டமைப்புகளின் வளர்ச்சியை பொறுத்தது என்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Exit mobile version