தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை யாரும் தொடங்கவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் குடும்பத்தினருடன் பிரேமலதா மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

















