பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய் இனங்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு நாளை முதல் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. மொத்தம் 200 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், 50 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பொது மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட பிட்புல் மற்றும் ராட் வீலர் நாய் இனங்களை மாநகராட்சி எல்லைக்குட்ட பகுதிகளில் வளர்ப்பதற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த வகை நாய்களுக்கு செல்லப்பிராணிகளின் உரிமம் பெற விண்ணப்பிப்பதற்கும், உரிமத்தை புதுப்பிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
