பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் மணடல தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து தூர் வாரிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை புறநகர் பகுதிகளில் டிட்வா புயலின் தாக்கம் காரணமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது,
இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் அண்ணா நகர் ஏழாவது பிரதான சாலையில் உள்ள கால்வாய்களில் தூர்வாரபடாததால் அடைப்பு ஏற்பட்டு மழை நீருடன் கலந்து கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது,
மேலும் பம்மல் மண்டலத்திற்க்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரபடாததால் மழை நீருடன் கழிவு நீர் வெளியேறி வருகிறது,
இது குறித்து பல முறை பம்மல் மண்டல தலைவர் வே.கருணாநிதி மற்றும் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்,
இதனால் அதிருப்தியான அப்பகுதிமக்கள் தாங்களாகவே முன் வந்து கால்வாய்களை தூர் வாரியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
