வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும்போது நேர்ந்த விபரீதம் – பெயிண்ட்டர் பலி

தாம்பரம் அருகே அடுக்கு மாடிகுடியிருப்பில், வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சேலையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளியான இவர், நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் இருந்த மின்மாற்றியின் மீது, ஏணி உரசியதாக தெரிகிறது. இதில், தூக்கி வீசபட்ட முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், முருகனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Exit mobile version