நிர்மலாவை சந்திக்க டெல்லியில் அதிமுக-வினர் முகாம்

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், தனபால் உள்ளிட்டோர் சந்தித்து பேசியுள்ளனர்.

அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இணைக்கவும், டி.டி.வி.தினகரனை கூட்டணியில் இணைக்கவும், பிஜேபி முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் முடிந்ததும், எடப்பாடி பழனிசாமியை சென்னையில் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். அடுத்த 2 நாள்களில் அவர் டெல்லி சென்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தனபால் உள்ளிட்டோர் டெல்லியில் வியாழக்கிழமை நிர்மலா சீத்தாராமனை சந்தித்துப் பேசியுள்ளனர்.

Exit mobile version