பகை மறந்து ஒன்று சேரும் கட்சிகள் – புதிய உத்வேகத்தில் NDA

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிஜேபியின் தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் இன்று சென்னையில் உள்ள கட்சி அலுவலத்த¤ல், பிஜேபி மையக்குழு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில், தேர்தல் இணை பொறுப்பாளர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் சோஹல், தமிழக பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அப்போது, சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிஜேபி போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பியூஸ் கோயல் தலைமையிலான குழு சந்தித்துப் பேசியது. அப்போது, அதிமுக தலைமை கழக நிர்வாகிகளான திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆகியோரும் இருந்தனர். அப்போது, தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்தும் இருகட்சி தலைவர்களும் விவாதித்தாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பியூஷ் கோயலும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட திட்டங்கள் குறித்து விவாதித்தாகத் தெரிவித்தனர். ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்ற, தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு குடும்பமாக செயல்படு பற்றியும், கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக பியூஸ் கோயல் கூறினார். தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசப்பட்டதா என்ற கேள்விக்கு இருவரும் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

Exit mobile version