அதிக மகசூல் தரும் நறுமணப் பயிர் வகைகளை உருவாக்கியதில் முக்கியப் பங்களிப்பை வழங்கிய இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசிய அறிவியல் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஐ.சி.ஏ.ஆர் விஞ்ஞானிகளுக்கு அறிவியல் விருதுகள் வழங்கப்பட்டது. அதிக மகசூல் தரும் நறுமணப் பயிர் வகைகளை உருவாக்குவதிலும், விவசாயிகளிடையே அவற்றை பிரபலப்படுத்தி, அந்தப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிப்பதிலும் இந்த விஞ்ஞானிகள் முக்கியப் பங்கு வகித்தனர். ஐ.சி.ஏ.ஆர் விஞ்ஞானிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நறுமணப் பணிகள் குழுவினருக்கு தேசிய அறிவியல் விருதுகளை திரவுபதி முர்மு வழங்கினார். இந்தப் பயிர்கள் மூலம் விவசாயிகளின் வருவாயும் அதிகரித்துள்ளது. அவர்களை தொழில முனைவோராகவும் மேம்படுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
